மாணவர்களுக்கு பரிசளிப்பு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகளில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகளில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
அந்த வகையில், மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.ஏ.ஜேக்கப் தலைமை வகித்தார். சகாயராஜ், அரிமா சங்க நிர்வாகி லட்சுமி நாராயணன், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக என்எல்சி பள்ளிகளின் கல்விச் செயலர் இள.நெடுமாறன், என்எல்சி பொது மருத்துவமனை மனநல நிபுணர் விஜயகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு அரசுப் பொதுத் தேர்வில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.