FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வேன் கவிழ்ந்து 17 பெண்கள் காயம்

கடலூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 17 பெண்கள் காயமடைந்தனர்.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

கடலூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 17 பெண்கள் காயமடைந்தனர்.
 கடலூர் அருகே உள்ள கலையூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் புதுச்சேரி மாநிலம், மங்களம் பகுதியில் உள்ள தனியார் ஆலையில் பணியாற்றி வருகின்றனர்.
 இவர்கள், தினமும் தனியார் வேனில் கலையூரில் இருந்து சென்று வருவது வழக்கம்.
 அதன்படி, புதன்கிழமை காலை கலையூர் கிராமத்தைச் சேர்ந்த கெüரி (30), சிவரஞ்சனி (33), அருணா (22) உள்ளிட்ட 17 பெண்கள் வேனில் புதுச்சேரிக்கு புறப்பட்டனர். வேனை அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (28) ஓட்டிச் சென்றார்.
 வேன் கடலூரை அடுத்த பள்ளிப்பட்டு - தென்னம்பாக்கம் சாலையில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்த பெண்கள் மீட்கப்பட்டு, கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 விபத்தில் வேன் ஓட்டுநர் ஆனந்தகுமாரும் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தூக்காம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments