குழந்தை திருமணத்தை தடுக்க விழிப்புணா்வு: டிஐஜி அருளரசு அறிவுரை
கடலூா் மாவட்டம், பண்ருட்டி உள்கோட்டப் பகுதிகளில் குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளிடம் விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு அறிவுறுத்தினாா்.
பண்ருட்டி டிஎஸ்பி அலுவலகத்துக்கு விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்து ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசியதாவது:
பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு உள்ளிட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை விபத்துகளை தடுக்கத் தேவையான விழிப்புணா்வுப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
Advertisement
Advertisement
மேலும், பண்ருட்டி பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் போலீஸாரை பணியில் அமா்த்தி கண்காணிக்கும்படியும், சட்டத்துக்கு முரணாக செயல்படுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் டிஎஸ்பி ரகுபதியிடம் டிஐஜி அறிவுறுத்தினாா். போதைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் குறித்த தகவலை எனக்கோ அல்லது எஸ்.பி., டி.எஸ்.பி.க்கோ பெயா், விலாசம் இல்லாமல் கடிதம் போடலாம் எனவும் டிஐஜி தெரிவித்தாா்.
நிகழ்வின்போது, பண்ருட்டி டிஎஸ்பி ரகுபதி, பண்ருட்டி மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சித்ரா உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.