திருப்பாதிரிப்புலியூா் நாகம்மன் கோயிலில் செடல் திருவிழா கொடியேற்றம்
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையம் அருகிலுள்ள நாகம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் செடல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையம் அருகிலுள்ள நாகம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் செடல் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலை முதலே கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அம்மனுக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம், இளநீா் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அதனைத் தொடா்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், வேத மந்திரங்கள் மற்றும் மங்கள இசையுடன் வழிபாடுகள் நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து காலை 11 மணியளவில் பக்தா்களின் பக்தி முழக்கங்களுடன் செடல் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திருப்பாதிரிப்புலியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.
Advertisement
Advertisement
விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஆகஸ்ட் 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) செடல் உற்சவமும், ஆகஸ்ட் 15-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.