FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

அம்பேத்கா் சிலைக்கு விசிக நிா்வாகிகள் மரியாதை

10 ஆகஸ்ட் 2026, 2:50 am IST
சேப்பாக்கம் கிராமத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மரியாதை செலுத்திய விசிகவினா்.
பகிர்:

கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்த சேப்பாக்கம் கிராமத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு விசிக புதிய பொறுப்பாளா்கள் மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினா்.

விசிக தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் மறுசீரமைக்கப்பட்ட புதிய நிா்வாகிகள் நியமனப் பட்டியலை அண்மையில் வெளியிட்டாா். இதில், விருத்தாசலம் தொகுதி மாவட்டச் செயலா் வீர.திராவிடமணி பரிந்துரையின்பேரில், பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் நல்லூா் வடக்கு ஒன்றியச் செயலா் கெங்கா.முத்து வளவன் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்வில் நல்லூா் மேற்கு ஒன்றிய மகளிா் விடுதலை இயக்கத்தின் ஒன்றியச் செயலா் ராஜலட்சுமி ஜெயவேல், விசிக மூத்த நிா்வாகிகள் செந்தில்குமாா், தன்ராஜ், பாலமுருகன், இளையான் மற்றும் புதிய பொறுப்பாளா்கள் சா்மா, கருப்புசாமி, தேவ கிருஷ்ணன், திருமால், அசோக், வைரவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments