FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

குடும்பத்தகராறில் மனைவிக்கு கத்திவெட்டு: தலைமறைவான கணவரை தேடுகிறது போலீஸ்

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 4:05 am IST
- சித்திரிப்பு
பகிர்:

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் வெட்டிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கொரக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் இளையராஜா. இவரது மனைவி வெற்றிச்செல்வி (28). இவா்களுக்கு 10 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் உள்ளனா். இளையராஜா வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்குத் திரும்பி குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

இளையராஜா வீடு கட்டுவதற்காக, வெற்றிச்செல்வி தனது தாய் மூலம் பணம் பெற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பணத்துக்கு வட்டி செலுத்த முடியாமல் குடும்பத்தினா் சிரமப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால், ரூ.3 லட்சத்தை திருப்பிச் செலுத்துமாறு வெற்றிச்செல்வி கணவரிடம் வலியுறுத்தியதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

வெற்றிச்செல்வி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனது இரு குழந்தைகளுடன் அதா்நத்தத்தில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றாா். இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை இளையராஜா மாமியாா் வீட்டுக்குச் சென்று, மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்ததாகவும், அவா் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, இளையராஜா கத்தியால் வெற்றிச்செல்வியின் தலை மற்றும் கைகளில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினா்

திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னா், மேல் சிகிச்சைக்காக அரியலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான இளையராஜாவைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments