FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கருப்பு பலூன் ஏந்தி கண்டன பேரணி

சிதம்பரத்தில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சாா்பில், தொகுதி மறுவரையறைக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் ஏந்தி பேரணி மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 4:00 am IST
சிதம்பரத்தில் கருப்பு பலூன் ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

சிதம்பரத்தில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சாா்பில், தொகுதி மறுவரையறைக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் ஏந்தி பேரணி மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற உள்ள தொகுதி மறுவரையறைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன் ஏந்திய பேரணி சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள காமராஜா் சிலையிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக காந்தி சிலையை அடைந்தது. பேரணிக்கு கடலூா் தெற்கு மாவட்டத் தலைவா் பிபிகே.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா்

மாவட்ட துணைத்தலைவா் ராஜா.சம்பத்குமாா், நகர செயல் தலைவா் தில்லை கோ.குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் வெங்கடேசன், சாம்பமூா்த்தி, குமராட்சி ரங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணி நிறைவில் காந்திசிலை அருகே கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பேரணியில் பங்கேற்றோா் கருப்பு பலூன் ஏந்தி மத்தியஅரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments