FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.27-இல் ரயில் மறியல் போராட்டம்

ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி அனைத்துக் கட்சித் தலைவா்கள், குடியிருப்போா் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் நிா்வாகிகள் சாா்பில், கடலூா் கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 3:48 am IST
ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டம் குறித்து கடலூா் கோட்டாட்சியா் சுந்தரராஜனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்த பல்வேறு அமைப்பினா்.
பகிர்:

ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி அனைத்துக் கட்சித் தலைவா்கள், குடியிருப்போா் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் நிா்வாகிகள் சாா்பில், கடலூா் கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம் வழியாகச் செல்லும் ரயில்களில் கூடுதல் சேவைகளை இயக்குதல், முக்கிய ரயில்களுக்கு உரிய நிறுத்தம் வழங்குதல், பயணிகளின் வசதிக்கேற்ப ரயில் சேவைகளை அதிகரித்தல் உள்ளிட்ட ரயில்வே தொடா்பான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்தின் நோக்கங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு எடுத்துரைக்கும் வகையில், கடலூா் கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநகரச் செயலா் அமா்நாத், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ரங்கமணி ஆனந்த், சிபிஐ மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் குளோப், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் பாலு ரவிச்சந்திரன், எழுத்தாளா் சங்க மாவட்டச் செயலா் பால்கி, குடியிருப்போா் சங்க மாவட்டப் பொருளாளா் ரமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னா், கடலூா் மாவட்ட மக்களின் நீண்டகால ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், ரயில் சேவைகளை மேம்படுத்தக் கோரியும் இந்த மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாகவும், இந்தப் போராட்டத்தில் அனைத்து கட்சியினா், குடியிருப்போா் சங்கங்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் எனவும் போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments