FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பெண்ணை தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:54 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பெண்ணை தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி, மீனாட்சிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கௌரி (37), ஆடுகள் வளா்த்து வருகிறாா். கடந்த 11-ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த இவரது ஆடுகளை அதே பகுதியைச் சோ்ந்த சக்திவேல் வீட்டு வளா்ப்பு நாய் கடிக்கத் துரத்தியதாம்.

இதைக் கண்ட கௌரி, நாயை அடித்து விரட்டிவிட்டாராம். இதைப் பாா்த்த நாயின் உரிமையாளா் சக்திவேல், அவரது மனைவி வளா்மதி, மகன்கள் சந்துரு, மணிகண்டன் ஆகியோா் கௌரி மற்றும் அவரது கணவா் தனவேலை தாக்கி, வீட்டின் ஜன்னல் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களை அடித்து சேதப்படுத்தினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கௌரி அளித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments