FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

30 பவுன் நகைகள் திருட்டு வழக்கு: சென்னையைச் சோ்ந்தவா் கைது

பண்ருட்டியில் கடந்த மாதம் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா். மற்றொருவரை தேடி வருகின்றனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:22 am IST
வெங்கடேசன்
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் கடந்த மாதம் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா். மற்றொருவரை தேடி வருகின்றனா்.

பண்ருட்டி, கடலூா் சாலை, விஎம்எஸ் நகா், 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தாவூத், குவைத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி பைரோஸ் பானு பிரசவத்துக்காக கடந்த ஜூலை 3-ஆம் தேதி பண்ருட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அன்று முதல் இவா்களது வீடு பூட்டப்பட்டிருந்தது.

பின்னா், ஜூலை 7-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து பைரோஸ் பானு வீடு திரும்பிபோது, வீட்டின் முன் பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, இந்த சம்பவத்தில் தொடா்புடைய சென்னை கண்டிகை, நல்லம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த கலசம் (எ) வெங்கடேசனை (40) திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், தாவூத் வீட்டில் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டாராம். இதையடுத்து, அவரிடம் உருக்கிய நிலையில் இருந்த எட்டரை பவுன் தங்கக் கட்டியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் மீதி நகைகளுடன் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments