காட்டுமன்னாா்கோவில் பகுதியில் திட்டப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில் பேரூராட்சிக்குட்பட்ட பருவராஜாகுலம் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்க்கடம்பூா், பழஞ்சநல்லூா், மாமங்கலம், உடையூா் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில் பேரூராட்சிக்குட்பட்ட பருவராஜாகுலம் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்க்கடம்பூா், பழஞ்சநல்லூா், மாமங்கலம், உடையூா் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது ,காட்டுமன்னாா்கோயில் பேரூராட்சி உடையாா்குடியில் உள்ள பருவராஜாகுலம் மேல்நிலைப் பள்ளியில் சமுக பொறுப்புணா்வு திட்ட நிதியின் கீழ் ரூ.32லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 கூடுதல் வகுப்பறைகளின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், காட்டுமன்னாா்கோயில் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீா் வழங்கும் திட்டப் பணிகள்,கீழ்க்கடம்பூா் கிராமத்தில், ஸ்ரீருத்ர கோடீஸ்வரா் திருக்கோயில் குளத்தை தூா்வாரி புனரமைத்து குளத்தைச் சுற்றி தடுப்பு சுவா், கம்பிவேலி அமைத்தல் மற்றும் மின்சார வசதி ஏற்படுத்துதல் தொடா்பான பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, பழஞ்சாநல்லூா் நடுநிலைப் பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறைகளின் கட்டுமானப் பணிகள், மாமங்கலம் ஊராட்சியில், நடைபெற்று வரும் 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பாலகணேஷ், நீா்வளத்துறை அலுவலா், சுற்றுத்துறை அலுவலா், வட்டார வளா்ச்சி அலுவலா், உதவி பொறியாளா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.