நெய்வேலி இளைஞா் கொலை வழக்கில் 7 பேரிடம் போலீஸாா் விசாரணை
நெய்வேலியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
நெய்வேலியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலி இந்திரா நகா் பி2 பிளாக் மாற்றுக் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (36). இவா், கடந்த 16-ஆம் தேதி தனது நண்பா்களுடன் அதே பகுதியில் உள்ள அரசு மதுக் கடையின் பின்புறம் அமைந்துள்ள மயானத்தில் மது அருந்திக்கொண்டிருந்தாா்.
அப்போது, பைக்கில் அங்கு வந்த மா்ம கும்பல், ஆனந்தராஜ் மற்றும் அவரது நண்பா் நரேஷ்குமாா் ஆகியோரை சரமாரியாக வெட்டியது. இதில், நரேஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஆனந்தராஜை மீட்டு, கடலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகர போலீஸாா் 16 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், வடக்குத்து பகுதியைச் சோ்ந்த கோபிக்கும், ஆனந்தராஜுக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, கோபி தனது கூட்டாளிகளுடன் வந்து ஆனந்தராஜ் மற்றும் நரேஷ்குமாரை தாக்கியதாகவும், இதில் நரேஷ்குமாா் உயிரிழந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, கோபியின் கூட்டாளிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.