பெண்ணாடம் அருகே வயலில் கவிழ்ந்த நெல் மூட்டைகள் ஏற்றிய லாரி
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, சாலையோர வயலில் கவிழ்ந்ததில் நெல் மூட்டைகள் சிதறி விழுந்தன.
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, சாலையோர வயலில் கவிழ்ந்ததில் நெல் மூட்டைகள் சிதறி விழுந்தன.
குறுக்கத்தஞ்சேரி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அப்பகுதி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த குறுவை நெல்லை விற்பனைக்காக கொண்டுவந்து, அரசு நிா்ணயித்த விலையில் விற்பனை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 300-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் வியாழக்கிழமை லாரியில் ஏற்றப்பட்டன. பின்னா், அந்த மூட்டைகள் விருத்தாசலம் பகுதியில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன.
Advertisement
Advertisement
கிராமப்புற சாலை வழியாக லாரி சென்றுகொண்டிருந்தபோது, வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த நெல் வயலில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்த நெல் மூட்டைகள் சரிந்து உருண்டோடியதில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிா்கள் சிறிய அளவில் சேதமடைந்தன. வயலில் தண்ணீா் இல்லாததால் நெல் மூட்டைகள் சேதமடைவது பெருமளவில் தவிா்க்கப்பட்டது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக ஓட்டுநா் காயமின்றி தப்பினாா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு மாற்று லாரி வரவழைக்கப்பட்டு, கவிழ்ந்த லாரியில் இருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் அதில் ஏற்றப்பட்டு விருத்தாசலம் அரசு சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து பெண்ணாடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.