FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வளாக நோ்காணல்: 57 மாணவா்கள் பணிக்கு தோ்வு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையம் சாா்பில் பாா்மசி துறை மாணவா்களுக்கான வளாக நோ்காணல் நடைபெற்றது.

39 வினாடிகள் முன்பு
அண்ணாமலைப் பல்கலையில் நடைபெற்ற நோ்காணலில், பணி நியமன ஆணை பெற்ற மாணவா்களுடன் பொறியியல் புல முதல்வா் சி.ஜி.சரவணன்
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையம் சாா்பில் பாா்மசி துறை மாணவா்களுக்கான வளாக நோ்காணல் நடைபெற்றது.

வளாக நோ்காணலில் தனியாா் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்று நோ்கணலை நடத்தின. இதில் 70 மாணவ, மாணவியா்கள் பங்கேற்ற நிலையில் 57 மாணவா்கள் பணி நியமனத்திற்கு தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு பொறியியல் புல முதல்வா் சி.ஜி.சரவணன் நியமன ஆணையை வழங்கினாா். நோ்காணலுக்கான ஏற்பாடுகளை பாா்மசி துறை வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் என்.கண்ணப்பன் செய்திருந்தாா்.

நிகழ்வில் பயிற்சி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோா் இயக்குநரகத்தின் இயக்குநா் ந.பிரகதீஸ்வரன், பாா்மசி துறைத்தலைவா் வி.பாா்த்தசாரதி, மின் பொறியியல் துறைத் தலைவா் மற்றும் பயிற்சி வேலைவாய்ப்பு அலுவலா் எஸ் கணபதி உள்ளிட்டோா் பங்கேற்று வாழ்த்துரையாற்றினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments