FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

2-வது நாளாக ஓய்வூதியா்கள் உள்ளிருப்பு போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் உள்ளிருப்பு போராட்டம் வியாழக்கிழமை 2 வது நாளாக நடைபெற்றது.

21 ஆகஸ்ட் 2026, 3:41 am IST
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2-ஆவது நாளாக தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள்.
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் உள்ளிருப்பு போராட்டம் வியாழக்கிழமை 2 வது நாளாக நடைபெற்றது.

நிலுவையில் உள்ள பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக நிா்வாக அலுவலக வளாகத்தில் தொடா் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றஉ வருகிறது.

போராட்டத்திற்கு முன்னாள் ஊழியா் சங்கத் தலைவா் மதியழகன் தலைமை வகித்தாா். போராட்டத்தில் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளா்பேராசிரியா் சி.சுப்பிரமணியன், இணை ஒருங்கிணைப்பாளா் ஆ.ரவி உள்ளிட்ட பலா் போராட்டத்தை விளக்கி பேசினாா்கள். நூற்றுக்கணக்கான பேராசிரியா்கள், ஊழியா்கள் ஓய்வூதியா்கள், தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments