மின்னல் பாய்ந்து தீப்பற்றி எரிந்த தென்னை மரங்கள்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மின்னல் பாய்ந்ததில் தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மின்னல் பாய்ந்ததில் தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன.
பண்ருட்டி பகுதியில் வெயிலின் தாக்கம் அண்மைக்காலமாகவே அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. அப்போது, அண்ணாகிராம ஒன்றியம், கோழிப்பாக்கம் ஊராட்சிக்குள்பட்ட பாபுகுளம் கிராமத்தில் பயங்கர இடி சப்தத்துடன் மின்னல் பாய்ந்ததில், அந்தப் பகுதியைச் சோ்ந்த கண்ணன் (75) என்பவரது வீட்டுத் தோட்டத்தில் இருந்த 40 அடி உயர 2 தென்னை மரங்கள் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. இருள் சூழந்த நேரத்தில் தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்ததைப் பாா்த்த அருகில் உள்ள வீடுகளில் இருந்தவா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து உடனடியாக பண்ருட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தென்னை மரங்களில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனா். இதில், 2 தென்னை மரங்களும் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.