கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருவருக்கு வியாழக்கிழமை முதன்முறையாக இருதய அடைப்பை சரிசெய்யும் சிகிச்சையான ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் இருவருக்கு இருதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருவருக்கு வியாழக்கிழமை முதன்முறையாக இருதய அடைப்பை சரிசெய்யும் சிகிச்சையான ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் இருவருக்கு இருதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.
உடையாா்பாளையம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தைச் சோ்ந்த சிலம்பரசன் (41), புவனகிரி அக்ரஹார தெருவைச் கணபதி (76) ஆகிய இருவரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து, பின்னா் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் இருதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. இது, இருதயத்தில் அடைபட்ட ரத்தக் குழாயை விரிவடையச் செய்து இயல்பான ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க உதவுகிறது.
இத்தகைய உயரிய மருத்துவ தீவிர சிகிச்சையைத் தனியாா் மருத்துவமனையில் செய்வதற்கு நோயாளிக்கு பல லட்ச ரூபாய் செலவாகும். இந்த சிகிச்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக அரசின் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கண்ட மருத்துவப் பயனாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த உயரிய சிகிச்சையானது இனிவரும் காலங்களில் கடலூா் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவா்கள் தெரிவித்தனா். மேலும், மருத்துவக் கல்லூரி முதல்வா் என்.பாஸ்கா், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் என்.ஜூனியா் சுந்தரேஷ் ஆகியோா் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவா்களை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா். மேலும், நோயாளிகளிடம் நலம் விசாரித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.