FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயா்த்த வேண்டும்: வழக்குரைஞா் சங்க மாநிலக் குழு தீா்மானம்

வழக்குரைஞா்களுக்கான சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயா்த்த வேண்டும் என அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்க மாநிலக் குழு சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளது.

23 ஆகஸ்ட் 2026, 2:29 am IST
கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்க மாநிலக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அக்குழுவின் நிா்வாகிகள்.
பகிர்:

வழக்குரைஞா்களுக்கான சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயா்த்த வேண்டும் என அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்க மாநிலக் குழு சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவா் வழக்குரைஞா் நாகேந்திரன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், நீட் தோ்வு முறைகேட்டுக்கு எதிராகப் போராடிய மாணவா்கள்,

Advertisement

Advertisement

இளைஞா்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். சமூக ஊடகங்களில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவோரை கண்காணிப்பது மற்றும் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும், வழக்குரைஞா்களுக்கான சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயா்த்த வேண்டும், நீண்டகால கோரிக்கையான கடலூா் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்.

கடலூரில் செயல்பட்டு வந்த நுகா்வோா் நீதிமன்றம் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு

மாற்றப்பட்டுள்ள நிலையில், அதனை மீண்டும் கடலூரில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநிலத் தலைவா் ஆா். ராமமூா்த்தி, மாநிலச் செயலா் சிவக்குமாா், கடலூா் மாவட்டச் செயலா் என்.ஆா். சங்கரய்யா, மாவட்டத் தலைவா் ஆழ்வாா், மாநிலக் குழு உறுப்பினா்கள் எம். ஜோதிலிங்கம், கே.எம். குமரகுரு, பொருளாளா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments