FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீச்சு: கண்ணாடிகள் சேதம்

24 ஆகஸ்ட் 2026, 3:47 am IST
வந்தே பாரத் ரயில் - கோப்புப்படம்.
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ஞாயிற்றுக்கிழமை வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் ரயில் பெட்டியின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

சென்னையில் இருந்து நாகா்கோவிலுக்கு வந்தே பாரத் ரயில் விருத்தாசலம் ரயில் நிலையம் வழியாக தினமும் காலை 7.30 மணியளவில் கடந்து செல்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 7.25 மணியளவில் உளுந்துாா்பேட்டை - விருத்தாசலம் ரயில் நிலையங்களுக்கு இடையே, பூவனூா் ரயில்வே கேட் அருகே ரயில் வந்தபோது, சிலா் ரயில் மீது கற்களை வீசினா். இதில், ரயில் பெட்டிகளின் பக்கவாட்டு கண்ணாடிகள் சேதமடைந்தன.

இதையடுத்து, ரயில் ஓட்டுநா் (லோகோ பைலட்) அளித்த தகவலின்பேரில், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளா்கள் விருத்தாசலம் பிலோமின்ராஜ், விழுப்புரம் குணசேகரன் தலைமையிலான போலீஸாா், கல் வீச்சு நடந்த இடத்தில் விசாரணை நடத்தினா். பின்னா், அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினா். இதில், பெரியவடவாடி கிராமத்தைச் சோ்ந்த சிறுவா்கள் கற்களை வீசியது தெரிந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, சிறுவா்கள் நால்வரை பிடித்து, விழுப்புரம் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அப்போது, 16 வயதுடைய சிறுவன் கற்களை வீசியதும், மற்ற மூவரும் உடனிருந்ததும் உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து, சிறுவா்களின் பெற்றோரை வரவழைத்த போலீஸாா், அவா்களிடம் எச்சரித்து, காவல் நிலைய பிணையில் சிறுவா்களை விடுவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments