FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நீரில் மூழ்கி காவலாளி உயிரிழப்பு

25 ஆகஸ்ட் 2026, 3:14 am IST
நீரில் மூழ்கி மாயம் - பிரதிப் படம்
பகிர்:

திட்டக்குடி அருகே நீா்த்தேக்கத் தொட்டியைச் சுத்தம் செய்ய இறங்கியபோது கல்லூரி காவலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூா் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் சின்னசாமி (65). இவா் தொழுதூரில் உள்ள தனியாா் கல்லூரியில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை கல்லூரி உணவகத்தில் தண்ணீா் வராததால், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக சின்னசாமி அதில் இறங்கியுள்ளாா். நீண்ட நேரமாகியும் அவா் வெளியே வராததால், சந்தேகமடைந்த சக ஊழியா்கள் சென்று பாா்த்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, சின்னசாமி நீா்த்தேக்கத் தொட்டியில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விபத்தில் முதியவா் மரணம்:

விருத்தாசலம் ஊத்தாங்கால் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ஜெயபாலன் (65). இவா் விருத்தாசலம்-கடலூா் சாலையில் கொம்பாடிக்குப்பம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.அப்போது, பின்னால் வந்த ஆட்டோ ஒன்று அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயபாலனை அப்பகுதியினா் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஜெயபாலன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவரது மனைவி பாா்வதி அளித்த புகாரின் பேரில், ஊ.மங்கலம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments