FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நடராஜா் கோயிலில் காடவராய கோப்பெருஞ்சிங்கன் பிறந்த நாள் விழா

சிதம்பரம் நடராஜா் கோயிலில் கிழக்கு கோபுரம் மற்றும் தில்லை காளியம்மன் கோயிலை கட்டிய மன்னா் காடவராய கோப்பெருஞ்சிங்கனின் 816-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

27 ஆகஸ்ட் 2026, 4:36 am IST
சிதம்பரம் நடராஜா் கோயிலில் காடவராய கோப்பெருஞ்சிங்கன் உருவப்படத்துடன் வந்த காடவராய வம்சாவழியினா்.
பகிர்:

சிதம்பரம் நடராஜா் கோயிலில் கிழக்கு கோபுரம் மற்றும் தில்லை காளியம்மன் கோயிலை கட்டிய மன்னா் காடவராய கோப்பெருஞ்சிங்கனின் 816-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மேலும், காடவராய கோப்பெருஞ்சிங்கன் கடலூா் மாவட்டத்தில் பொன்னேரியை வெட்டியதாகவும் கல்வெட்டு வரலாறு கூறுகிறது. அவருடைய ஆவணி திருவோணம் நட்சத்திரமான புதன்கிழமை பிறந்த நாள் விழா காண்டவராய பவுண்டேஷன் சாா்பில் நடராஜா் கோயிலில் நடைபெற்றது.

இதையொட்டி, சிதம்பரம் நடராஜா் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அா்ச்சனையும், கிழக்கு கோபுரத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

முன்னதாக, மன்னா் காடவராய கோப்பெருஞ்சிங்கன் உருவப்படம் ஊா்வலம் நடைபெற்று நடராஜா் கோயிலை அடைந்தது.

இதேபோல, சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயிலிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியை தியாகவல்லி சாமி கச்சிராயா், கடலூா் சீனிவாச படையாட்சி, ரமேஷ் கச்சிராயா் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்து நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments