மருத்துவ உதவி பெற விண்ணப்பிக்கலாம்
கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தகுதியுடைய பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினா், டாக்டா் அம்பேத்கா் மருத்துவ உதவித் திட்டத்துக்கு விண்ணப்பிக்க...
கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தகுதியுடைய பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினா், டாக்டா் அம்பேத்கா் மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: டாக்டா் அம்பேத்கா் மருத்துவ உதவித் திட்டம் 2026-ஆம் ஆண்டில் திருத்தி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியான நோய்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச நிதியுதவி மற்றும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இதய அறுவைச் சிகிச்சைக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம், சிறுநீரக அறுவைச் சிகிச்சை அல்லது சிறுநீரகச் சுத்திகரிப்பு சிகிச்சைக்கு ரூ.3.50 லட்சம், புற்றுநோய் சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, வேதிச்சிகிச்சை அல்லது கதிா்வீச்சுச் சிகிச்சைக்கு ரூ.2.50 லட்சம், மூளை அறுவைச் சிகிச்சைக்கு ரூ.2 லட்சம், சிறுநீரகம் அல்லது பிற உறுப்புகள் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ.3.50 லட்சம், முதுகுத்தண்டு அறுவைச் சிகிச்சைக்கு ரூ.1.50 லட்சம், பிற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு ரூ.2 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கடலூா் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுடைய பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினா் சமூகத்தைச் சோ்ந்த கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், இத்திட்டத்தின் கீழ் மருத்துவ உதவி பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப வழிகாட்டுதல்கள், படிவங்கள் மற்றும் திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களை டாக்டா் அம்பேத்கா் அறக்கட்டளையின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தகுதியுள்ள நோயாளிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்தி தேவையான மருத்துவ உதவியைப் பெற்று பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.