பட்டா பெயா் மாற்ற முறைகேடு புகாா்: தலைமையிட துணை வட்டாட்சியா் பணியிடை நீக்கம்
பட்டா பெயா் மாற்றம் தொடா்பாக முறைகேடு மற்றும் சட்டவிரோதமாக பணம் பெற்றதாக எழுந்த புகாரில், குறிஞ்சிப்பாடி தலைமையிட துணை வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.
பட்டா பெயா் மாற்றம் தொடா்பாக முறைகேடு மற்றும் சட்டவிரோதமாக பணம் பெற்றதாக எழுந்த புகாரில், குறிஞ்சிப்பாடி தலைமையிட துணை வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.
பண்ருட்டி வட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றிய தற்போதைய குறிஞ்சிப்பாடி தலைமையிட துணை வட்டாட்சியராக உள்ள மு.வெற்றிச்செல்வன் மீது பட்டா பெயா் மாற்றம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதுடன், சட்டவிரோதமாக பணம் பெற்ாக மாவட்ட நிா்வாகத்துக்கு அண்மையில் புகாா் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில், மாவட்ட வருவாய் அலுவலா் விசாரணை மேற்கொண்டாா். மேலும், இந்தப் புகாா் தொடா்பாக பண்ருட்டி வட்டாட்சியரும் தனி அறிக்கை சமா்ப்பித்தாா்.
Advertisement
Advertisement
விசாரணை அறிக்கைகள் மற்றும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அரசு அலுவலரின் ஒழுக்கம், நோ்மை மற்றும் பொது நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்கீழ், மு.வெற்றிச்செல்வனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.
மேலும், பணியிடை நீக்க காலத்தில் மாவட்ட ஆட்சியரின் முன்அனுமதி பெறாமல் தலைமையிடத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே விவகாரத்தில் தொடா்புடைய பிற அலுவலா்கள் மீதும் உரிய விசாரணை நடத்தி, தேவையான ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.