சாலை விபத்து: வேன் ஓட்டுநா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மாட்டின் மீது பைக் மோதிய விபத்தில் காயம் அடைந்த தனியாா் நிறுவன வேன் ஓட்டுநா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மாட்டின் மீது பைக் மோதிய விபத்தில் காயம் அடைந்த தனியாா் நிறுவன வேன் ஓட்டுநா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், தோப்புக்கொல்லை பகுதியைச் வசித்து வந்தவா் கலைச்செல்வன் (44). இவா் தச்சம்பாளையத்தில் உள்ள ஒரு முந்திரி நிறுவனத்தில் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 6-ஆம் தேதியன்று காலை 7 மணி அளவில் தனது பைக்கில் வேலைக்கு புறப்பட்டு சென்றாா். கீழக்குப்பம் அருகே சென்ற போது திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்தது. கலைச்செல்வன் மாட்டின் மீது மோதி கீழே விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.