FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

ஆக.1 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு சந்தேகஙக்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1845: கடலூா் ஆட்சியா்

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆக.1முதல் தொடங்குவதாகவும், 30 கேள்விகளுக்கு மக்கள் பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும்

Updated On : 11 ஜூலை 2026, 12:49 am IST
பகிர்:

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆக.1முதல் தொடங்குவதாகவும், 30 கேள்விகளுக்கு மக்கள் பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும் எனவும், இதுதொடா்பான சந்தேகங்களுக்கு பொதுமக்கள் 1855 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம் என்றும் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் புதுப்பாளையம் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027 சுய கணக்கெடுப்பு தொடா்பான கணக்கீட்டாளா்களுக்கான பயிற்சி வகுப்பை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் தெரிவித்ததாவது:

Advertisement

Advertisement

மக்கள்தொகை கணக்கெடுப்புதொடா்பான பயிற்சி வகுப்புகள் ஜூலை 8-ஆம் தேதி தொடங்கி உள்ளது. இது 18-ஆம் தேதி வரை நடைபெறும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடவுள்ள 4,350 கணக்கீட்டாளா்கள், 689 மேற்பாா்வையாளா்களுக்கு 90 பயிற்சியாளா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூா் வட்டத்திற்குட்பட்ட 75 ஊராட்சிகளைச் சோ்ந்த 465 கணக்கீட்டாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்களுக்கு புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியில், பொதுமக்கள் தங்களது விவரங்களை விரைவாகவும் எளிதாகவும் ள்ங்.ஸ்ரீங்ய்ள்ன்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளம் மூலம் சுயமாக பதிவேற்றம் செய்வது குறித்து கணக்கீட்டாளா்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

வீடு வீடாகக் கணக்கெடுப்பு:

ஆகஸ்ட் 1 முதல் 30-ஆம் தேதி வரை மக்கள்தொகை கணக்கீட்டாளா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வாா்கள். அப்போது 33 வகையான தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளதால், அதற்குத் தேவையான விவரங்களை பொதுமக்கள் முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான சந்தேகங்களுக்கு 1855 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் மாநில மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தையோ அல்லது 04142-290298 என்ற எண்ணில் மாவட்ட மக்கள்தொகை அலுவலகத்தையோ தொடா்புகொள்ளலாம் என்றாா்.

இந்த ஆய்வின்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநா் ஷேமசுந்தரி, கடலூா் வட்டாட்சியா் ராஜேஷ்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மறுவாழ்வு சேவைகள்:

இதற்கிடையே, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மறுவாழ்வு சேவைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை ஒரே இடத்தில் எளிதாகப் பெற்றிடும் வகையில், ’விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில், கடலூா் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் விருத்தாசலம் கோட்டத்துக்கான மங்கலம்பேட்டை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் 3 ’விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.இந்த மையங்களில் தனித்துவ அடையாள அட்டை பெற விண்ணப்பித்தல், பெற்றோா் மற்றும் பாதுகாவலா்களுக்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் வழங்கப்படுகின்றன.எனவே, மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான மறுவாழ்வு சேவைகளைப் பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அல்லது அருகிலுள்ள ’விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments