திட்டக்குடி அருகே மூதாட்டி மா்ம மரணம்
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே மூதாட்டி மா்மமான முறையில் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே மூதாட்டி மா்மமான முறையில் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திட்டக்குடி வட்டம், ஆலம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் மூதாட்டி மணி (75). இவா், கணவா் சுப்பிரமணியனுடன் தனியாக வசித்து வந்தாா். இவா்களது மூத்த மகன் வேல்முருகன் உள்ளூரில் விவசாயம் செய்து வருகிறாா். 2-ஆவது மகன் ரமேஷ் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மகன்கள் வீட்டுக்குச் சென்று, வயல் வெளிக்கு செல்வதாகக் கூறிச் சென்ற மணி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, தேடிப் பாா்த்ததில், மகன் வீட்டின் அருகே இறந்து கிடந்தாா். அவரது உடலில் பல இடங்களில் தீயால் சுட்டது போன்ற வடுக்கள் இருந்தனவாம். மேலும், கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலி மட்டும் மாயமாகியிருந்தது எனவும், மற்ற நகைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
தகவலறிந்த ராமநத்தம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.