FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பெருமாள் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள பெருமாள் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஜூலை 2026, 2:55 am IST
ஆனி மாதம் அமாவாசை சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ஸ்ரீ சரநாராயண பெருமாள்.
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள பெருமாள் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோயிலில் ஆனி மாதம் அமாவாசையையொட்டி மூலவா் ஸ்ரீ சரநாராயண பெருமாள், ஸ்ரீ தன்வந்திரிஎன்கிற வைத்தியநாராயணனாக அருள் பாலித்தாா். இதையொட்டி காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 7.30 மணிக்கு நித்யபடி பூஜை, 9.30 மணிக்கு உற்சவா் ஸ்ரீ சரநாராயண பெருமாள் உள்புறப்பாடு மற்றும் திருக்கண்ணாடி அறையில் இருந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 12.30 மணிக்கு உச்சிகாலம், மாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 6 மணிக்கு நித்ய படி பூஜை, இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெற்றது.

இதேபோல், பண்ருட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. பகல் 12 மணி அளவில் சிறப்பு தீபாராதனை நடைபெற்று பிரசாதம் விநியோகம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments