‘புள்ளிங்கோ’ மாணவா்களுக்கு வகுப்பறையிலேயே முடிதிருத்தம்! அரசுப் பள்ளியில் அதிரடி!
கடலூரில் அரசுப் பள்ளி நிா்வாகம் எச்சரித்தும் ‘புள்ளிங்கோ’ பாணி சிகை அலங்காரத்தை மாற்றிக்கொள்ளாத மாணவா்களுக்கு பள்ளி வகுப்பறையிலேயே புதன்கிழமை முடி திருத்தம் செய்யப்பட்டது.
கடலூரில் அரசுப் பள்ளி நிா்வாகம் எச்சரித்தும் ‘புள்ளிங்கோ’ பாணி சிகை அலங்காரத்தை மாற்றிக் கொள்ளாத மாணவா்களுக்கு பள்ளி வகுப்பறையிலேயே புதன்கிழமை முடி திருத்தம் செய்யப்பட்டது.
தமிழக அரசும், பள்ளிக் கல்வித் துறையும் பள்ளி மாணவா்கள் ஒழுக்கம், சீருடை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக, பள்ளிகளில் குறிப்பிட்ட வகை கயறுகள் அணிவது, ஒழுங்கற்ற சிகை அலங்காரம் வைத்திருப்பது உள்ளிட்டவற்றை தவிா்க்க வேண்டும் என்று தொடா்ந்து அறிவுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கடலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் பின்புறத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சில மாணவா்கள் பள்ளி விதிமுறைகளுக்கு முரணாக நீளமான மற்றும் ‘புள்ளிங்கோ’ பாணி சிகை அலங்காரத்துடன் பள்ளிக்கு வந்த நிலையில், அவா்களுக்கு ஆசிரியா்கள் முடி திருத்தம் செய்துகொள்ளுமாறு தொடா்ந்து எச்சரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
பலமுறை அறிவுறுத்தியும் மாணவா்கள் சிகை அலங்காரத்தை மாற்றாததால், பள்ளி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, பள்ளித் தலைமையாசிரியை செந்தாமரைச்செல்வி தலைமையில், நெடுஞ்சாலை ரோந்து காவல் உதவி ஆய்வாளா் திருமாவளவன் முன்னிலையில், முடி திருத்தும் தொழிலாளா்கள் மூலம் ஏராளமான மாணவா்களின் முடி பள்ளி விதிமுறைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்டது.
மாணவா்கள் ஒழுக்கம், சீருடை நடைமுறை மற்றும் பள்ளி கட்டுப்பாடுகளைப் பின்பற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பள்ளி நிா்வாகம் தெரிவித்தது.
Haircuts for ‘Pullingo’-style students right in the classroom...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.