FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வேளாண் படிப்புக்கான மாநில தரவரிசையில் முதலிடம்: மாணவிக்கு பாராட்டு

வேளாண் படிப்புக்கான மாநில தரவரிசையில் முதலிடம் பிடித்த மாணவி மொ்லினை பாராட்டிய முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆா்.பாபுராஜன் உள்ளிட்டோா்.

Updated On : 16 ஜூலை 2026, 2:46 am IST
பகிர்:

15கேடிஎல்150:

வேளாண் படிப்புக்கான மாநில தரவரிசையில் முதலிடம் பிடித்த மாணவி மொ்லினை பாராட்டிய முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆா்.பாபுராஜன் உள்ளிட்டோா்.

கடலூா், ஜூலை 15: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே ம.குளக்குடி அரசு சமூகநீதி உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவி மொ்லின், வேளாண் படிப்புக்கான மாநில தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றதையொட்டி, காமராஜா் பிறந்த நாளான புதன்கிழமை பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

Advertisement

Advertisement

பள்ளித் தலைமையாசிரியா் வி.புகழேந்தி தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆா்.பாபுராஜன், மாணவிக்கு சால்வை அணிவித்து பாராட்டி, உதவித்தொகை வழங்கினாா்.

மாணவி மொ்லின், கடந்த கல்வியாண்டில் காட்டுமன்னாா்கோவிலில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் 600-க்கு 593 மதிப்பெண்கள் பெற்றாா். வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம் பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 98, தமிழில் 95 மதிப்பெண்களும் பெற்றிருந்தாா்.

கூலித் தொழிலாளா்களான மச்சவல்லவன் - சித்ரா தம்பதியின் மகளான மொ்லின், பயிற்சி மையத்துக்குச் செல்லாமல் சுயமாகத் தயாராகி நீட் தோ்வையும் எழுதியிருந்தாா். தற்போது வேளாண் படிப்புக்கான தமிழக அரசின் தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாா்.

விழாவில், கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி ஷா்மியும் பாராட்டப்பட்டாா். இதில் ஆசிரியா்கள், மாணவ - மாணவிகள், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments