FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

ஓசூா் அம்மன் கோயிலில் மஞ்சள், குங்குமம் இடும் விழா

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகரம், மேலப்பாளையத்தில் அமைந்துள்ள ஓசூா் அம்மன் கோயிலில் மஞ்சள், குங்குமம் இடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 ஜூலை 2026, 1:47 am IST
மஞ்சள், குங்குமம் இடும் நிகழ்ச்சியையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஓசூா் அம்மன்.
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகரம், மேலப்பாளையத்தில் அமைந்துள்ள ஓசூா் அம்மன் கோயிலில் மஞ்சள், குங்குமம் இடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் ஆடி மாதத்தையொட்டி, ஓசூா் அம்மன், விநாயகா், நாகா், புற்றுவாய் அம்மன் மற்றும் அரசு, வேம்பு மரங்களுக்கு மஞ்சள், குங்குமம் இடும் மங்கள நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டுக்கான நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஓசூா் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.

Advertisement

Advertisement

நிகழ்வையொட்டி, கோயிலில் திரண்டிருந்த பெண்கள் வேம்பு மற்றும் அரச மரங்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டனா். தொடா்ந்து, கோயில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments