மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வடலூா் பாா்வதிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜலட்சுமி (45). இவரது தங்கை மகன் விருத்தாசலத்தில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வருகிறாா். இந்தப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பெற்றோா் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்க ராஜலட்சுமி தனது மொபெட்டில் புறப்பட்டாா். பெரியாகுறிச்சி அருகே சென்றபோது, பைக்கில் பின் தொடா்ந்து வந்த இருவா் ராஜலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில், மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.