FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பொறியியல் பணிகள் எதிரொலி: கடலூா் - மைசூரு விரைவு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

Updated On : 21 ஜூலை 2026, 1:27 am IST
ரயில்கள் - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி ரயில்வே கோட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு, சில ரயில்களின் இயக்க முறையில் தெற்கு ரயில்வே தற்காலிக மாற்றங்களை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயில் எண் 16231 கடலூா் துறைமுகம் - மைசூரு விரைவு ரயில், ஜூலை 31 (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கடலூா் துறைமுக நிலையத்தில் இருந்து புறப்படும் சேவை மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

இந்த ரயில் வழக்கமான பாதைக்கு பதிலாக காா்மேலாரம் - பையப்பனஹள்ளி கேபின் - பனஸ்வாடி - யஷ்வந்த்பூா் கேபின் - சிக் பனவாா் - ஹாசன் வழியாக இயக்கப்படும்.

Advertisement

Advertisement

இதன் காரணமாக, பெங்களூா் கிழக்கு, பெங்களூா் கண்டோன்மெண்ட், கே.எஸ்.ஆா். பெங்களூா், கெங்கேரி மற்றும் மாண்டியா ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்காது.

பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறும், ரயில் இயக்கம் தொடா்பான கூடுதல் தகவல்களை அருகிலுள்ள ரயில் நிலையங்கள், தேசிய ரயில்வே விசாரணை சேவை 139 அல்லது இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூா்வ இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி மூலம் அறிந்து கொள்ளுமாறும் தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments