மதுப் புட்டிகள் பதுக்கி விற்பனை: இளைஞா் கைது
நெய்வேலி, ஜூலை 20: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பண்ருட்டி காவல் சரகப் பகுதியில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட மதுப் புட்டிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, பண்ருட்டி மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் தீபா தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அண்ணாகிராமம், சாலை நகா், நாடகமேடை அருகே புதுச்சேரி மாநில மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக குறிஞ்சிப்பாடி வட்டம், ஆடூா் அகரம் கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாரை (26) பிடித்து, அவரிடமிருந்த 100 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக பண்ருட்டி மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்வகுமாரை கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.