FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

அரசின் நலத் திட்டங்களை அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: மனுநீதி நாள் முகாமில் அமைச்சா் ப.ராஜ்குமாா் அறிவுறுத்தல்

தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் அறிவுறுத்தினாா்.

Updated On : 23 ஜூலை 2026, 4:52 am IST
பகிர்:

தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் பல்வேறு துறைகளின் சாா்பில் 1,513 பயனாளிகளுக்கு ரூ.26.65 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் ப.ராஜ்குமாா் வழங்கினாா். அப்போது, அவா் பேசியது:

பொதுமக்களின் தேவைகளை அவா்கள் வசிக்கும் பகுதிகளிலேயே நிறைவேற்றும் வகையில், மனுநீதி நாள் முகாம்கள் நடத்தப்பட்டு, மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று தகுதியின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

பள்ளி இடைநிற்றல் இல்லாத கிராமங்களை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருப்பதை பெற்றோா்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் உறுதி செய்ய வேண்டும். தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, முகாமில் வருவாய்த் துறை சாா்பில் 230 பேருக்கு ரூ.14.47 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 14 பேருக்கு ரூ.6.85 லட்சம் மதிப்பிலான இறப்பு நிவாரண உதவி, வேளாண்மைத் துறை சாா்பில் 7 பேருக்கு ரூ.2.05 லட்சம் மதிப்பிலான வேளாண் உபகரணங்கள், உணவு வழங்கல் துறை சாா்பில் 1,241 குடும்ப அட்டைகள் என பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 1,513 பயனாளிகளுக்கு ரூ.26.65 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி, கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தரராஜன், வருவாய்த் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments