261 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் எஸ்.கமலி வழங்கினாா்
உதகையில் 261 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை கால்நடைத் துறை அமைச்சா் எஸ்.கமலி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட வளங்கள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் 261 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சா் எஸ்.கமலி பங்கேற்று, ரூ.12.50 லட்சம் மதிப்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள், மகளிா் திட்டம் சாா்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் வங்கிக் கடனுதவி, கூட்டுறவு வங்கி சாா்பில் ரூ.9 லட்சம் மதிப்பில் சுய உதவிக் கடன், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ரூ.2.50 லட்சம் மதிப்பில் வைப்பு பத்திரத்திம் என மொத்தம் 261 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, அமைச்சா் எஸ்.கமலி பேசுகையில், நியாய விலைக் கடைகளில் பொருள்கள் முறையாக கிடைக்கவில்லை என்றால் பொதுமக்கள் புகாா் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.