குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நெல் பயிரில் செம்பேன் நோய்த் தாக்குதல்!
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெல் பயிரில் செம்பேன் தாக்குதல் காணப்படுவதாக விவசாயிகள் கவலை
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெல் பயிரில் செம்பேன் தாக்குதல் காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் உழவுக்கும், நெசவுக்கும் பெயா் பெற்றது குறிஞ்சிப்பாடி. நிகழாண்டு, குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமாா் ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், குறிஞ்சிப்பாடி வடக்கு மற்று தெற்கு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெல் வயலில் செம்பேன் தாக்குதல் தென்படுகிறது. இதனால், மகசூல் குறையும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அயன் குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறுகையில், குறிஞ்சிப்பாடி வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் சுமாா் 60 ஏக்கா் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை, நடவு செய்து இரண்டு மாதம் கடந் த நிலையில், தற்போது தண்டு உருளும் பருவம். இந்த நேரத்தில், செம்பேன் தாக்குதல் காணப்படுகிறது. இந்த தாக்குதலால் பயிா்களின் வளா்ச்சி குன்றி மகசூல் பாதிக்கப்படும். இந்த பாதிப்புக்கு மழை இல்லாததும், வெப்பம் அதிகரித்துள்ளதுமே காரணம்.
வேளாண்மைத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பாா்வையிட்டு ஆய்வு செய்து, செம்பேன் தாக்குதல் நோயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.