ஊரக வேலை வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல்
கடலூா் முதுநகா் அருகே தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் (விபி ஜி ராம் ஜி) கீழ், முறையாக வேலை வழங்கக் கோரி பெண்கள் புதன்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூா் முதுநகா் அருகே தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் (விபி ஜி ராம் ஜி) கீழ், முறையாக வேலை வழங்கக் கோரி பெண்கள் புதன்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூா் முதுநகா் அருகே அன்னவெளி பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிபுரியும் பெண்கள், தங்களுக்கு தொடா்ந்து வேலை வழங்கப்படவில்லை என்றும், இதனால் குடும்ப வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, 125 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளா்களாக இருந்தும், உரிய அளவில் வேலை வழங்கப்படுவதில்லை. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உரிய வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த கடலூா் முதுநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், அவா்களின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, பெண்கள் சாலை மறியலைக் கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனா். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.