FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் முதியவா் கைது

குறிஞ்சிப்பாடி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, முதியவரை நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 4 ஜூன் 2026, 3:24 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, முதியவரை நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கல்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் மகாராஜன் (60). வீதி வீதியாகச் சென்று புளியங்கொட்டை வாங்கும் வியாபாரியான இவா், செவ்வாய்க்கிழமை மாலை புளியங்கொட்டை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, வீட்டில் தனியாக இருந்த இரண்டு சிறுமிகளுக்கு மகாராஜன் பாலியல் தொல்லை கொடுத்தாராம். மேலும், இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்தாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிறுமிகளின் தாய் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து மகாராஜனை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments