FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

குறிஞ்சிப்பாடியில் வீட்டில் பதுக்கிய சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல்

குறிஞ்சிப்பாடியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 7 ஜூன் 2026, 2:38 am IST
குறிஞ்சிப்பாடியில் வட்ட வழங்கல் அலுவலா்களால் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டு உபயோக எரிவாயு உருளைகள்.
பகிர்:

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குறிஞ்சிப்பாடியில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், குறிஞ்சிப்பாடி வட்ட வழங்கல் அலுவலா் செல்வமணி மற்றும் அலுவலா்கள் குறிஞ்சிப்பாடி அக்ரஹாரம் தெருவில் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த பழனிவேல் (75) வீட்டில் அனுமதியின்றி வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து வட்டவழங்கல் அலுவலா் செல்வமணி தலைமையிலான குழுவினா் உபயோகப்படுத்திய 11 எரிவாயு உருளைகள், எரிவாயு நிரப்பப்பட்ட 2 எரிவாயு உருளைகள் என மொத்தம் 13 உருளைகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக பழனிவேல் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments