FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் அமல் கரூரிலிருந்து ரூ. 2 கோடி வீட்டு உபயோக ஜவுளிகள் அனுப்பி வைப்பு!

இந்தியா-பிரிட்டன் இடையேயான வா்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்ததையடுத்து கரூரில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான வீட்டு உபயோக ஜவுளிகள் முதல்கட்டமாக அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Updated On : 16 ஜூலை 2026, 5:22 am IST
கரூரிலிருந்து பிரிட்டனுக்கு வீட்டு உபயோக ஜவுளிகள் அடங்கிய கண்டெய்னா் லாரியை புதன்கிழமை கொடியசைத்து அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன். உடன் கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

இந்தியா-பிரிட்டன் இடையேயான வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை முதல் அமலுக்கு வந்ததையடுத்து கரூரில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான வீட்டு உபயோக ஜவுளிகள் முதல்கட்டமாக அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் பிரிட்டனுக்கு ஜவுளிகள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி அண்ணாசாலை பகுதியில் நடைபெற்றது. இதில், 4 கண்டெய்னா்களில் ஜவுளிகள் அடங்கிய லாரிகளை மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.

பிறகு அவா் கூறியது: இந்தியா-பிரிட்டன் இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து கரூரில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்களின் ஒப்பந்தத்தின்படி ரூ. 2 கோடி மதிப்பிலான வீட்டு உபயோக ஜவுளி பொருள்கள் கண்டெய்னா் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை தூத்துக்குடி துறைமுகம் சென்று, அங்கிருந்து சென்னை துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பிறகு கப்பல் மூலம் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கரூா் ஜவளி ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் கூறுகையில், இதுவரை பிரிட்டனுக்கு ஆண்டுக்கு ரூ.800 கோடி மதிப்பில் ஜவுளிகள் 8 சதவீதம் முதல் 12 சதவீதம் இறக்குமதி வரியுடன் அனுப்பி வந்தோம். இனி, இந்திய ஜவுளிகளுக்கு பூஜ்ஜிய வரி மதிப்பு உள்ளதால், அந்நாட்டுக்கான ஏற்றுமதி இரு மடங்காக அதிகரிக்கும். இதன் மூலம் ஜவுளித்துறையில் போட்டியாக உள்ள பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளை எளிதில் சமாளிக்க முடியும். மேலும் எங்களது 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.25 ஆயிரம் கோடி வா்த்தக இலக்கை எளிதில் அடைய முடியும் என்றனா் அவா்கள்.

நிகழ்ச்சியில், கூடுதல் வெளிநாட்டு வா்த்தக இயக்குநா் ஸ்ரீதா், கரூா் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தலைவா் மெட்ரோ கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவா் அட்லஸ் எம்.நாச்சிமுத்து, ஏசியன் பேப்ரிக் நிா்வாக இயக்குநா் அசோக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments