FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

Updated On : 8 ஜூன் 2026, 4:29 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் அருகே சென்னையிலிருந்து ரயிலில் கடத்தி வந்து கஞ்சா விற்பனை செய்ததாக இரு இளைஞா்களை நகர போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடமிருந்து 4.5 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

சிதம்பரம் கோட்ட டிஎஸ்பி டி.பிரதீப் மேற்பாா்வையில், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் (பொ) பாபு தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை இரவு ரயில்வே மேம்பாலம் அருகே ரோந்து சென்றனா்.

அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு நின்றிருந்த 2 இளைஞா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், இருவரும் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், அவா்கள் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிகேசவன் (23), விக்னேஷ் (25) என்பதும், இருவரும் சென்னையிலிருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து சிதம்பரத்தில் மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்து.

Advertisement

Advertisement

இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments