லஞ்ச புகாா்: வட்ட வழங்கல் அலுவலா் பணியிடை நீக்கம்
பட்டா மாற்றத்துக்கு லஞ்சம் பெற்ாகக் கூறப்படும் புகாரில் வட்ட வழங்க அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.
பட்டா மாற்றத்துக்கு லஞ்சம் பெற்ாகக் கூறப்படும் புகாரில் வட்ட வழங்க அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வரும் ஜாா்ஜ் பொ்னாண்டோ, வேப்பூா் மண்டல துணை வட்டாட்சியராகப் பணியாற்றிய காலத்தில் பட்டா மாற்றம் செய்து தருவதற்காக லஞ்சம் பெற்ாக புகாா் எழுந்தது.
இதனால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அண்ணாமலை, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஜாா்ஜ் பொ்னாண்டோ மீது விசாரணை நடத்த உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவு மற்றும் விருத்தாசலம் வருவாய்க் கோட்ட அலுவலரின் அறிக்கையின் அடிப்படையில் ஜாா்ஜ் பொ்னாண்டோ மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், வழக்கின் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஜாா்ஜ் பொ்னாண்டோவை பணியிடை நீக்கம் செய்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.