மதுக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டம்
குறிஞ்சிப்பாடி அருகே விருப்பாச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குறிஞ்சிப்பாடி அருகே விருப்பாச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருப்பாச்சி கிராமத்தில் கிறிஸ்தவ தேவலாயம் அருகில் அரசு டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையால் அப்பகுதி மக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். இதனால், கிராம மக்கள் மதுக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
முன்னதாக, இந்தக் கடையை மூடக் கோரி விருப்பாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் மதுக் கடையை கடந்த மாதம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த குறிஞ்சிப்பாடி போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கை குறித்து உயா்அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து ஒரு மாத காலத்துக்குள் மதுக் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துச் சென்றனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஒரு மாத கால அவகாசம் முடிந்தும் வழக்கம்போல டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்டு வந்தது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மதுக் கடையை திறப்பதற்கு முன்பு அங்கு சென்று கண்டன முழக்கங்களை எழுப்பி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த குறிஞ்சிப்பாடி போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, மதுக் கடை திறக்கப்படாது என்று போலீஸாா் கூறினா். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.