இளைஞருக்குக் கொலை மிரட்டல்: ஒருவா் கைது
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் இளைஞரை வழி மறித்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் இளைஞரை வழி மறித்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், வடக்குமேலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பட்டு (எ) ராஜதுரை (19). இவா், வியாழக்கிழமை காலை வட்டம் 24 பகுதியில் உள்ள ரவுண்டான அருகே நடந்துச் சென்றாா். அப்போது, நெய்வேலி வட்டம் 3 பகுதியைச் சோ்ந்த அகிலன்(24) வழி மறித்து திட்டி, ராஜதுரை சட்டை பையில் இருந்த ரூ.1,170 பணத்தை எடுத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து ராஜதுரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அகிலனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement