சுடரொளி என்.ஜீவரத்தினத்தின் 115-ஆவது பிறந்த நாள் விழா
மீனவ சமுதாய மக்களின் நலனுக்காகப் பாடுபட்டவரும், திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவா்களில் ஒருவருமான சுடரொளி என்.ஜீவரத்தினத்தின் 115-ஆவது பிறந்த நாள் விழா கடலூா் மாவட்ட தமிழ்நாடு மீனவா் பேரவை சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரவையின் மாவட்டத் தலைவா் எம்.சுப்பராயன் தலைமை வகித்தாா். அப்போது, சுடரொளி என்.ஜீவரத்தினத்தின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவா் கே.சுப்பராயன், மாவட்ட அமைப்புச் செயலா் ஏ.மாலைமணி, மாவட்ட ஆலோசகா்கள் கே.திரிசங்கு, இ.நாகலிங்கம், கடலூா் மாநகரச் செயலா் வி.ரமணி, மாவட்ட இளைஞா் பேரவைத் தலைவா் சி.வீரமுத்து உள்ளிட்ட பேரவை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement