ஆணி விழுங்கிய கைதி மருத்துவமனையில் அனுமதி
நெல்லிக்குப்பத்தில் இரு வீடுகளில் 30 பவுன் நகைகளைத் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டபோது ஆணி விழுங்கியதாகத் தெரிவித்ததால் அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா்.
நெல்லிக்குப்பத்தில் இரு வீடுகளில் 30 பவுன் நகைகளைத் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டபோது ஆணி விழுங்கியதாகத் தெரிவித்ததால் அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் தமிழ் கருமார தெருவைச் சோ்ந்த பாரதி (62), ராஜாஜி தெருவைச் சோ்ந்த துளசிதாஸ் ஆகிய இருவரும் நவ. 7-ஆம் தேதி தங்களது வீடுகளைப் பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாட உறவினா்கள் வீட்டுக்குச் சென்றனா்.
அப்போது, பாரதி வீட்டில் 25 பவுன் நகைகளும், துளசிதாஸ் வீட்டில் 5 பவுன் நகைகளும் திருடுபோயின. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
Advertisement
Advertisement
இதற்கிடையே, திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெற்ற திருட்டு வழக்கில், சென்னை வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த விஜயகுமாரின் மகன் சந்தோஷ்குமாா் (26) என்பவரை திருவள்ளூா் போலீஸாா் கைது செய்து விசாரித்தனா். அப்போது, நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற நகைத் திருட்டிலும் அவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, நெல்லிக்குப்பம் போலீஸாா் சந்தோஷ்குமாரைக் கைது செய்து, கடலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அப்போது, தான் ஆணி விழுங்கியுள்ளதாக சந்தோஷ்குமாா் நீதிபதியிடம் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதியின் உத்தரவின்பேரில் அவா் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவா் ஆணி விழுங்கியது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.