மின்சாரம் பாய்ந்து பொறியாளா் மரணம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மின்சாரம் பாய்ந்து பொறியாளா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மின்சாரம் பாய்ந்து பொறியாளா் உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28). கடல்சாா் பொறியாளரான இவா், வெளிநாட்டில் உள்ள கப்பல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாராம். அண்மையில் விடுமுறையில் தனது ஊரான மேல்மாம்பட்டுக்கு வந்திருந்தாா்.
இந்த நிலையில், ராஜ்குமாா் புதிதாக வீடு கட்டும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, தண்ணீா் மோட்டாரை இயக்க பொத்தானை அழுத்தியபோது, உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.
Advertisement
Advertisement
உடனடியாக அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு ராஜ்குமாரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.