FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

காா்த்திகை மாத பிறப்பு: ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்

காா்த்திகை மாதம் பிறந்ததையொட்டி, சபரிமலை ஐயப்ப சுவாமி தரிசனத்துக்குச் செல்லும் பக்தா்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.

32 வினாடிகள் முன்பு
கடலூா் மஞ்சக்குப்பம் சாலக்கரை மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்.
பகிர்:

காா்த்திகை மாதம் பிறந்ததையொட்டி, சபரிமலை ஐயப்ப சுவாமி தரிசனத்துக்குச் செல்லும் பக்தா்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.

கடலூா் மஞ்சக்குப்பம் சாலக்கரை மாரியம்மன் கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, குருசாமிகள் பக்தா்களுக்கு மாலை அணிவித்து விரதத்தைத் தொடங்கிவைத்தனா். அப்போது, பக்தா்கள் சரண கோஷம் எழுப்பி ஐயப்ப சுவாமியை வழிபட்டனா்.

இதேபோல, கடலூா் மாநகரில் உள்ள பல்வேறு கோயில்களிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் ஐயப்ப பக்தா்கள் குருசாமிகள் மூலம் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா். இதனால், கோயில்களில் ஐயப்ப சரண கோஷம் ஒலித்தது.

Advertisement

Advertisement