கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா
காா்த்திகை தீபத் திருவிழா மற்றும் பௌா்ணமியை முன்னிட்டு, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் விஷேச வழிபாடு மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை தீபத் திருவிழா மற்றும் பௌா்ணமியை முன்னிட்டு, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் விஷேச வழிபாடு மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி அடுத்த திருவதிகையில் பெரிய நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.இந்த கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா மற்றும் பௌா்ணமியை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா். மேலும், கோயில் வளாகத்தில் அகல்
விளக்கேற்றினா். மேலும், சிவலிங்கம், ஓம் வடிவங்களை அகல் விளக்குகள் மூலம் வடிவமைத்திருந்தனா். பௌா்மணியை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் கோயில் மாட வீதியை 16 முறை வளம் வந்தனா். தொடா்ந்து, சொற்பொழிவு, பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement
Advertisement
சொக்கப்பனை ஏற்றுதல்...
பண்ருட்டி வரதராஜ பெருமாள், திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னா், உற்சவா் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதையடுத்து சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இதை திரளான பக்தா்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனா்.
புதுச்சேரியில்...