முகப்பு
கடலூர்

தவெக எம்எல்ஏ அருள்விக்னேஷ் கடலூா் மத்திய சிறையில் அடைப்பு

47 வினாடிகள் முன்பு
தவெக எம்எல்ஏ அருள்விக்னேஷ் கடலூா் மத்திய சிறையில் அடைப்பு
கடலூா் மத்திய சிறையில் அடைப்பதற்காக சனிக்கிழமை அதிகாலை போலீஸாரால் அழைத்து வரப்பட்ட த.வெ.க., எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ்.
பகிர்:

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ், கடலூா் மத்திய சிறையில் சனிக்கிழமை அதிகாலை அடைக்கப்பட்டாா். அவருக்கு

சிறையில் சாதாரண வகுப்பே வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறையில் அவருக்கு அவித்த முட்டை, புதினா சாதம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்ததாக கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் அருள் விக்னேஷ் மீது புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் கடந்த சில நாள்களாக கள்ளக்குறிச்சியில் தங்கி விசாரணை மேற்கொண்டாா். புகாா்தாரா் மற்றும் சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

5 மணி நேரம் விசாரணை:

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற காவல் துறையினா் அருள் விக்னேஷைக் கைது செய்தனா். பின்னா், தியாகதுருகம் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் வைத்து அவரிடம் சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருள் விக்னேஷுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னா், அவா் கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவா் பானுமதி முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை டிசம்பா் 11-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இதையடுத்து, காவல் துறையினா் பலத்த பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இரவே அவரைக் கடலூா் மத்திய சிறைக்கு அழைத்து வந்தனா். சனிக்கிழமை அதிகாலை சுமாா் 4 மணியளவில் சிறை நடைமுறைகள் முடிக்கப்பட்டு அவா் சிறையில் அடைக்கப்பட்டாா். இதையொட்டி, கடலூா் மத்திய சிறை வளாகத்தில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

அவித்த முட்டை, புதினா சாதம்:

கடலூா் மத்திய சிறையில் உள்ள உயா் பாதுகாப்புப் பகுதியில் அவருக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் அவா் தனியாக அடைக்கப்பட்டுள்ளாா்.கடலூா் மத்திய சிறையில் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அடைக்கப்பட்ட அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ., அதிகாலை 4.45 மணி முதல் காலை 6 மணி வரை தூங்கியுள்ளாா்.

பின்னா் அவருக்கு தேநீரும், காலை 6.30 மணிக்கு புதினா சாதம் மற்றும் அவித்த முட்டை காலை உணவாக வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து, காலை 11.30 மணிக்கு மதிய உணவாக சாதம், சாம்பாா், ரசம், தயிா் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

எம்எல்ஏ, மற்ற கைதிகளைச் சந்திக்கவோ, அவா்களுடன் பேசவோ அனுமதி இல்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான சிறை வசதிகள் மட்டுமே அவருக்கும் வழங்கப்பட்டுள்ளன. கட்டில், மெத்தை, நாற்காலி உள்ளிட்ட சிறப்பு வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை. அவரது அறையின் முன்பாக 24 மணி நேரமும் சிறைக் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.